வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரண்டு வெவ்வேறு இடங்களில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி, சட்டவிரோதமாக மணல் ஏற்றி வந்த எட்டு உழவு இயந்திரமும், எட்டு சாரதியையும் நேற்று (07) மாலை கைது செய்துள்ளதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினரால் புணாணை, பொத்தானை பகுதியில் அனுமதிப்பத்திர விதிகளை மீறி, சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரமும், நான்கு சந்தேக நபரையும் காவத்தமுனை பகுதியில் வைத்து கைதுக் செய்துள்ளனர்.
அத்தோடு, கிரான் புலிபாய்ந்தகல் பகுதியில், அனுமதிப்பத்திர விதிகளை மீறி சட்டவிரோதமான முறையில் மண் ஏற்றி வந்த நிலையில் நான்கு உழவு இயந்திரமும், நான்கு சந்தேக நபரையும் கிரான் பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.