சந்தையில் வெள்ளைச் சீனியின் விலை குறைக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை நேற்று வெளியிட்டுள்ள இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் இந்த விலைக் குறைப்பு இடம்பெற்றுள்ளது.புதிய விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைவாக வர்த்தகர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோர் பொதியிடப்படாத ஒரு கிலோ வெள்ளை சீனியை 100 ரூபா சில்லறை விலைக்கு விற்பனை செய்ய வேண்டும். பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளைச ;சீனியின் ஆகக்கூடிய விலை 105 ரூபாவாகும்.
இந்த விலைக்கட்டுப்பாட்டை மீறி விற்பனை செய்வோருக்கு எதிராக விரைவான சட்டவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.