சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசம்!

சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை ஜெயாவேல்சாமி குழுவினர் நான்கு நாட்களில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
 
அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
 
கடந்த சனிக்கிழமை (11)  இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது தெரிந்ததே.
 
இன்று (15) புதன்கிழமை ஐந்தாவது நாள் குழுவினர் இயக்கச்சி  ஆனையிறவு ஊடாக பரந்தன் பகுதியை வந்தடைந்தனர்.
இரவு நெத்தலிஆறு பகுதியில் தங்குவார்கள்.
 
இன்று (16) வியாழக்கிழமை வள்ளிபுனம் பிரதேசத்திற்குள் பிரவேசிப்பார்கள்.
மழையும் வெயிலும் கலந்த காலநிலையில் சுமார் 110 அடியார்கள் இப் பாதயாத்திரையில் பங்கேற்று வருகின்றனர்.

Related posts