(எம்.ஏ.றமீஸ்)
‘ஒரே நாடு நாம் இலங்கையர்’ என்னும் தொனிப்பொருளின் கீழ் நீதி மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் சமாதான நீதிவான்கள் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட சமாதான நீதிவான்களுக்கான விஷேட ஒன்றுகூடல் நிகழ்வு (17) அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் இடம்பெற்றது.
அமைப்பின் தேசியப் பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ மஜீத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது நாட்டில் உள்ள மக்கள் அன்றாடம் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் எவ்வாறு தமக்கான தீர்வினையும் நிவாரணங்களையும் எவ்வாறு பெற்றுக் கொள்ள முடியும் என்பது பற்றியதான விஷேட விழிப்புணர்வுக் கலந்துரையாடல் துறைசார் வளவாளர்களால் நெறிப்படுத்தப்பட்து.
இதன்போது துறைசார் சமூக சேவையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தேச அபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதில் சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளரும் பிரபல சமூக சேவையாளரும், தனவந்தரும், பிரபல தொழிலதிபருமான கே.துரைநாயகம் அவர்கள் தேச அபிமானி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
கடந்த பல வருடங்களாக சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்து வரும் பிரபல தொழிலதிபர் கே.துரைநாயகம் அவர்களின் சமூக செயற்பாடுகளை நன்கு அவதானித்து அவருக்காக தேச அபிமானி விருதினை தமது அமைப்பு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றது என அமைப்பின் தேசிய பணிப்பாளர் கலாநிதி பஹத் ஏ மஜீத் இதன்போது குறிப்பிட்டார்.