சம்மாந்துறை நெய்னாகாடு பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு பிரதேசத்தில் இன்று பி.ப யானையின் தாக்குதலுக்கு இலக்காகி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிர் இழந்தவர் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள சென்னல்கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த 51 வயதுடையவர் ஆவார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.