மட்டக்களப்பில் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான நிவாரணப் பொருட்கள் வழகிவைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட இலங்கேஸ்வரி சிக்கன கடன் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கான உலர் உணவு நிவாரணப் பொதிகள் சிக்கனக் கடன் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் அமைந்துள்ள சங்க அலுவலகத்தில் வைத்து இன்று (24) வழங்கி வைக்கப்பட்டது.
இக்கூட்டுறவுச் சங்கத்தில் அங்கம்வகிக்கும் 40 உறுப்பினர்களுக்கு அவர்களது சேமிப்பிலான சங்க நிதியிலிருந்து ஒவ்வொன்றும் சுமார் 1000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.பீ. புவிராஜசிங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது சங்கத்தின் செயலாளர் செல்வி செபமாலமேரி, பொருலாளர் கே. ஹீன்நிலமே மற்றும் அனேக உறுப்பினர்கள் பிரசன்னமாயிருந்தனர்.
இதேவேளை இச்சங்க உறுப்பினர்களின் சந்தாப்பண சேமிப்பு நிதியினைக் கொண்டு சுயதொழில் முயற்சிக்கான சிக்கனக் கடன் உதவிகளை தமது உறுப்பினர்களுக்கு வழங்கி வருவதுடன் 25 ஆண்டுகளாக இச்சங்கம் சிறப்பாக இயங்கி வருவதாகவும் சங்கத்தின் தலைவர் மாவட்ட ஊடகப் பிரிவிற்குத் தெரிவித்தார்.