ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி வருகின்றனர் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (06) அக்கரைப்பற்று பிரதேசத்தில் அமைந்துள்ள காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இக் கருத்தை முன்வைத்தார்.
இங்கு கருத்து தெரிவிக்கையில்..
பூகோளவியல் ரீதியாக தமிழ் மக்கள் பல பிரச்சினைகளை அம்பாறை மாவட்டத்தில் சந்தித்து வருகின்றனர். இங்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் தமிழர்களின் இருப்பு சார்ந்த விடயங்களின் எனக்கு மாத்திரமல்ல அனைத்து அம்பாறை மாவட்ட மக்களுக்குமே பொறுப்புடையவர்கள்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஏனைய மாவட்டங்களை விட அம்பாறை மாவட்டத்தின் மக்களும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் மிகவும் இன்றியமையாத ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக எமது பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிட்டால் பூர்வீகத்தை இழக்க நேரிடும் நிலங்களை பறிகொடுக்க நேரிடும் நமது கலை கலாச்சார விடையங்களை ஏனைய சக்திகளின் தலையீடு இருக்கும்.
இன்று அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த்தேசியத்தை சிதைக்க தேசிய, சர்வதேசரீதியில் பல சக்திகள் உள்நுழைய பட்டிருக்கின்றன அந்த சக்திகளின் மூலம் தமிழ் மக்களின் வாக்குகள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அழிக்கப்படாவிட்டால் தேசியத்திற்கு பின்னடைவு ஏற்படும் ஆனால் அம்பாறை மாவட்டத்திற்கு தமிழ் பிரதிநிதித்துவத்தை இழக்க நேரிடும்.
பேரினவாத சக்திகளின் கைக்கூலிகளாக இருக்கும் சிலர் இங்கு ஊடுருவி இருக்கின்றனர் இவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் இது ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்ற பொறுப்பும் கடமையாகும்.
பட்டதாரிகள் நியமனத்தில் அரசுக்கு தெரியும் இந்த நியமனத்தை தேர்தல்கள் ஆணையாளர் தடுத்து நிறுத்துவார் என்று. கடந்த காலத்தில் கூட ஐக்கிய தேசிய கட்சியும் வேலைவாய்ப்பு நியமனங்களை தேர்தல் காலத்தில் வழங்கி மக்களை ஏமாற்றி இருந்தது .ஐக்கிய தேசிய கட்சியும் பொது ஜன பெரமுன தமிழ் மக்களை மாத்திரமல்ல அனைத்து இலங்கை மக்களையும் காலா காலத்துக்கு ஏமாற்றி அவமானப்படுத்துகிறார்கள்.
இதேபோன்றுதான் மூன்றே நாட்களில் பொது ஜன பெரமுன தலைமையிலான ஆட்சி அமைந்தால் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படும் என தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் கூறப்பட்டது அதனை அவர்களின் கைக்கூலியான கருணாவும் வலியுறுத்தினார் ஆனால் அவை இன்றுவரை நிறைவேற்றப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
மேலும் நான்கரை வருடகாலமாக அம்பாறை மாவட்ட மக்களின் நலன் சார்ந்த விடயங்களில் தோளோடு தோள் கொடுத்து உரிமை சார்ந்த விடயங்களில் என்னோடு கை கொடுத்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்திருந்தார்.