அபு ஹின்சா
சிலோன் மீடியா போரத்தின் முன்னெடுப்புக்களையும், புதிய சிந்தனைச் செயற்பாடுகளையும் மெச்சுகின்றேன் என தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.
தென்கிழக்கு பல்கலைக்கழக கலை, கலாச்சார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவாகியமைக்காகவும் உபவேந்தர் விருது பெற்றமைக்காகவும் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் அவர்களை சிலோன் மீடியா போர பிரதிநிதிகள் இன்று (15) ஞாயிற்றுக்கிழமை அவரது வீடு சென்று கௌரவித்தனர். இதன்போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.
இக்கௌரவிப்பு நிகழ்வில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீத், செயலாளர் ஏ.எல்.எம். முஜாஹித், பொருளாளர் நூருள் ஹுதா உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது சிலோன் மீடியா போரம் ஊடகவியலாளர்களின் நலன்களுக்கான செயற்பாடுகள், பொது விடயங்களிலான முன்னெடுப்புக்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளை தான் மெச்சுவதோடு தனது பாராட்டுக்களையும் போரத்தின் பிரதிநிதிகளிடம் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.