சீனியை அதிக விலைக்கு விநியோகிப்பவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென, நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இவ்வாறான இறக்குமதியாளர்களின் இறக்குமதி வசதிகளும் இடைநிறுத்தப்படுமெனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
உலக சந்தையில் சீனியின் விலை குறைவடைந்துள்ளதால், அதன் இறக்குமதி விலையில் ஒரு கிலோகிராமுக்கு 52 ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் உலக சந்தையில் சீனியின் விலை மிகவும் குறைவடைந்து செல்கின்ற நிலையில், புதிய வரி அறவீடானது முன்பை விட ஒரு கிலோகிராம் சீனிக்கு 9 ரூபாய் இலாபம் பெறும் நிலை இறக்குமதியாளர்களுக்கு கிடைப்பதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.