சுப்ரீம் செப் வெற்றியாளர்களுக்கு அவுஸ்திரேலியாவிலுள்ள சிறந்த கல்லூரியில் சமையல்கலை விசேட பயிற்சி

எஸ்4ஐஜி இன் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுப்ரீம் செப் இறுதிப் பேட்டிக்குத் தெரிவான சிறந்த நான்கு சமையல் கலைஞர்களுக்கு அவுஸ்திரேலிய அரசின் அனுசரணையில் அவுஸ்திரேலியாவிலுள்ள சிறந்த கல்லூரிகளில் சமையல் கலைப் பயிற்சியனைப் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
 
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி , மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. கலாமதி பத்மராஜா ஆகியோரினால் இவர்களுக்கான புலமைப் பரிசில்களும் சான்றிதழ்களும் இன்று (25) மியானி தொழில் பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
 
சுற்றுளாத்துறையுடன் தொடர்புடைய புதிய தொழில் முயற்சிகள் தொழிலினை ஆரம்பிப்பதற்கும், திறன் அபிவிரு;ததி பயிற்சிகளை வளங்கவும், வேலை வாய்ப்புக் களைப் பெற்றுக் கொடுக்கவும் நோக்ககாகக் கொண்டு இயங்கிவரும் எஸ்.4.ஐ.ஜி அமைப்பின் ஏற்பாட்டில் சுப்ரீம் செப் எனம் சமையல் கலை வல்லுனர்களைத் தெரிவு செய்யும் போட்டித் தொடர் இடம்பெற்றது.
 
நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற இப்பேட்டியில் சுமார் 400 சமையல் கலைஞர்கள் பங்குபற்றினர். இதில் தெரிவு செய்யப்பட்ட 20 சிறந்த போட்டியாளர்களுக்கு எஸ்4ஐஜி யினால் நட்சத்திர ஹோட்டல் தலைமை செப் களினால் விசேட பயிற்சிகள் மட்டக்களப்பு மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் வைத்து வழங்கப்பட்டது. இவர்களில் இருந்து இறுதிப் போட்டிக்குத் தெரிவான சிறந்த சமையல்கலைஞர்களுக்கான இறுதிப் போட்டி இன்று (25) மியானி மியானி தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம் பெற்றது. 
 
இப்போட்டியில் பொலன்னறுவை மாவட்டத்ததைச் சேர்ந்த சம்பத் முதலிடத்தினையும், அம்பாரை மாவட்டத்ததைச் சேர்ந்த ஹ{சாம் இரண்டம் இடத்தினையும், மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சர்மினி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
 
இதுதவிர சுற்றுளாத்துறையின் மற்றுமொரு அங்கமாக புகைப்படக் கலைஞர்கள், வீடியோ படப்பிடிப்புக் கலைஞர்கள், சமுக வலைத்தள மென்பொருலாளர்களினது படைப்புக்களும் கண்காட்சியா வைக்கப்பட்டிருந்தன.
 
எஸ்4ஐஜியின் குழுத் தலைவர் டேவிட் அப்லெட் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கை சுற்றுளா அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கலாநிதி. பிரசாத் ஜயசூரிய, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுற்றுளா அமைச்சின் செயலாளர் ஆர.எம்.சீ. ரத்நாயக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சுற்றுளா அமைச்சின் பணிப்பாளர் என்.ஜீ. தயாரத்ன, கிழக்கு மாகாண சுற்றுளா பணியகத்தின் பொது முகாமையாளர் ஆர். ஞானசேகர், கிழக்கு மாகாண கிராமிய அபிவிருத்தி திணைக்களப் மாகாணப் பணிப்பாளர் என். தனன்ஜயன்கலந்துகொண்டனர்
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts