சுவாமி விவேகானந்தரின் 125வது ஆண்டு சிகாகோ சொற்பொழிவு ஞாபகார்த்த நிகழ்வுகள்

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவு ஞாபகார்த்த விழா மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் அனுசரணையில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் சிறந்த வரவேற்ப்பை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மட்டுநகர் புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் முதல்வர்; தலைமையில்  கடந்த வெள்ளிக் கிழமை (02.11.2018) இடம்பெற்ற நிகழ்வுகள் மிகவும் நேர்த்தியாக அமைந்திருந்ததோடு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் அதீத ஆர்வத்தினை வெளிப்படுத்தியிருந்தமையும் அவதானிக்கப்பட்டது.
சிறப்புச் சொற்பொழிவு மற்றும் கலை கலாசார நிகழ்வுகளுடன் இடம்பெற்ற நிகழ்வுக்கு நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றியிருந்தனர். இவற்றிற்கு மேலாக சுவாமி விவேகானந்தரின சிகாகோ உரையை மையப்படுத்திய குறுந்திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. இது மாணவர்களுக்கு ஓர் உத்வேகத்தை கொடுத்திருந்தது. மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பொது மேலாளர் ஸ்ரீமத் சுவாமி தக்க்ஷஜானந்தஜீ மஹராஜ் அவர்களின் சிறப்புரை நிகழ்விற்கு வலிமைசேர்த்தது.

Related posts