சுவிஸ் உதயம் அமைப்பின் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட தலைவர் க.சிவஞானசுந்தரம் அவர்களது தன்னிச்சையான செயற்பாடுகாரணமாக சுவிஸ் உதயம் அமைப்பின் மத்தியகுழு அவரைத் தலைவர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக அவ் அமைப்பின் ஒருங்கமைப்பாளர் தேவசகாயம் மற்றும் செயலாளர் அன்பளவாணர் ராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில் சுவிஸ் உதயம் அமைப்பினது பொதுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றபோது புதிதாக க.சிவஞானசுந்தரம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார் ஆனால் அவரது சுயநலபோக்கும் சுவிஸ் உதயம் அமைப்பினது விதிமுறைகளுக்கு முரணாகவும் செயற்பட்டமையால் அவரை அமைப்பில் இருந்து உடனடியாக நீக்கியுள்ளோம். என்பதனை எமது அமைப்பின் அங்கத்தவர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அதாவது அவர் சுவிஸ் உதயத்தினது கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி தன்னிச்சையாக சுவிஸ் உதயத்தின் விசேட கூட்டத்திற்கு எதிர்வரும் 21 ஆம்திகதி அறிவித்துள்ளார்.
இக்கூட்டம் தொடர்பாக சுவிஸ் உதயத்தின் செயலாளர் மற்றும் மத்தியகுழு உறுப்பினர் யாருக்கும் தெரியாது எனவேஇக்கூட்டத்திற்கு கலந்து கொள்ளத்தேவையில்லை எனத் தெரிவித்துள்ளனர்.