(சா.நடனசபேசன்)
சுவிஸ் உதயம் அமைப்பினது சமூகசேவைக்காகவே முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சராக இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களது முயற்சியாலேயே இக்காணி பெறப்பட்டு இருப்பது பெருமையாக இருக்கின்றது என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
குறிப்பாகச் சொல்லப்போனால் சுவிஸ் உதயத்தின் முன்னாள் செயலாளர் குணசீலன் மற்றும் துரைநாயகம் ஆகியோரது வேண்டுதலின் பயனாலே இக்காணி இவ் அமைப்புக்குக் கிடைக்கப்பெற்று இருக்கின்றது.
சுவிஸ் உதயத்திற்குச் சொந்தமான மட்டக்களப்பு திராய் மடுவில் அமைந்துள்ள காணிக்கு சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிவைக்கும் நிகழ்வு 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலைப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்
அவர்மேலும் பேசுகையில் எவராக இருந்தாலும் சமூகநோக்குடையதாக இருக்கவேண்டும் அவ்வாறு இருந்து சமூகத்தைப்பற்றி சிந்தித்து சேவைசெய்கின்றவர்தான் முன்னாள்முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள்
சுவிஸ் உதயம் அமைப்பானது ஏழை மாணவர்களது கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்காற்றி வருகின்றது. இதனுடைய தலைவர் சுதர்சன் மற்றும் பொருளாளர் துரைநாயகம் பிரதிச்செயலாளர் அம்பலவானர் ராஜன் மற்றும் நிருவாகக்குழுவினர் அத்தோடு கிழக்குமாகாணக்கிளையின் நிருவாகத்தினதும் சேவைகளை பாராட்டவேண்டும். ஏன் என்றால் தாங்கள் உழைக்கும் பணத்தில் சிறுதொகையினைச் சேகரித்து ஏழை மக்களது கல்வி, வாழ்வாதாரத்திற்கு உதவிவருகின்றனர் இவர்களது நோக்கம் தமிழ்ச்சமூகத்தின் கல்வியை முன்னேற்றவேண்டும் என்பதேயாகும்.இவ்வாறு ஒவ்வொருவரும் சிந்தித்தால் எமது சமூகத்தினை முன்னேற்றமுடியும் என்றார்.
பாராளுமன்ற உறுப்பினர் வியாழந்திரன் பேசுகையில் கிழக்குமாகாணத்தில் இவ்வாறான அமைப்புப்பு உருவாகி கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவதையிட்டு பெருமையாக இருக்கின்றது அத்தோடு கிழக்குமாகாணத்தில் இவ் அமைப்பை வழிநடத்துவது கல்விப்புலத்தில் இருக்கின்றவர்கள் இது மிகவும் பொருத்தமானதாக இருப்பதுடன் எமது கல்வி வளர்ச்சிக்கு சிறப்பானதாக அமையும் அத்தோடு இக்காணியைப் பெற்றுக்கொடுத்த முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கும் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.