சுவிஸ் உதயம் அமைப்பினால் பெரும்பான்மை இன மாணவர்களுக்கு உதவி வழங்கிவைப்பு

எஸ்.சபேசன்

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்த அம்பாரை ரஜகலதென்ன பௌத்த பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பையுடன் கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் இடம்பெற்றது

ரஜகலதென்ன பாடசாலையின் நிர்வாகம் சுவிஸ் உதயம் அமைப்பினரிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க 160 மாணவர்களுக்கு கல்வி அபிவிருத்திக்கான உதவி வழங்கிவைக்கப்பட்டன இதன் ஒருபகுதி நிதி  உதவியினை தாய்ச்சங்கத்தின் உறுப்பினர் சோ.பரமேஸ்வரன் வழங்கிவைத்திருந்தார்

இந் நிகழ்வில்  தாய்ச்சங்கப் பொருளாளர் சமூகசேவகர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன உபதலைவர் கண.வரதராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Related posts