மட்டக்களப்பு மாவட்டத்தில் வறிய நிலையில் உள்ள விசேட தேவையுடையவர்கள் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் உதவி வழங்கும் பணிகளை சுவிஸ் உதயம் அமைப்பு முன்னெடுத்துவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட நாவற்குடா கிழக்கில் மாற்றுத்திறனாளியை கொண்ட குடும்பம் ஒன்றுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் தலைவர் ஓய்வு நிலை கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தாய்ச்சங்க உப பொருளாளர் பேரின்பராஜா அவர்களின் கடின முயற்சியினால் கந்தசாமி மற்றும் பீற்றர் ஆகியோரின் அனுசரனையில் நாவற்குடாவில் ஓர் மாற்றுத்திறனாளி குடும்பத்திற்கு வாழ்வாதார உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன