(சா.நடனசபேசன்)
சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் நிருவாக சபைக்கூட்டம் 6 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் அவர்களது தலைமையில் சுவிஸ் நாட்டின் டீநடிடிநசபளவசயளளநஇ3123 டீநடி எனும் இடத்தில் கொவிட் 19 விதி முறைகளுக்கு அமைவாக இடம்பெற்றது
இக் கூட்டத்தின் போது இலங்கையில் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன அத்தோடு எதிர்காலத்தில் முன்னெடுக்க இருக்கும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகவும் முன்மொழியப்படடு அத்தீர்மானங்களே எதிர்காலத்தில் நாடைமுறைப்படுத்த இருப்பதாக அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இக்கூட்டத்திற்கு அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன்,பொருளாளர் க.துரைநாயகம்,மற்றும்; உதவிப்பொருளாளர் ,வி.பேரின்பராஜா, பிரதித் தலைவர் கே.தியாகராஜா உதவிச் செயலாளர் சுவாஸ்கோ மற்றும் நிருவாகசபை உறுப்பினர்களான ப.ஜெயதரன் குமாரவேல் பாலா, கே.கஜேந்திரன் அத்தோடு நலன் விரும்பிகளான டி.என். விஜயகுமார் ,எஸ்.கந்தசாமி, தேவராஜாமரியதாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதேவேளை இவ் அமைபின் செயற்பாட்டிற்காக பல வழிகளிலும் உதவிகளைச் செய்த அனைவருக்கும் மற்றும் நிருவாகசபை உறுப்பினர்களுக்கும் அமைப்பின் செயலாளர் அம்பலவானர் ராஜன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.