எஸ்.சபேசன்
சுவிஸ் உதயம் கிழக்கின் உதவிச் செயலாளர் திருமதி செல்விமனோகர் அவர்களது 31 ஆம் நாள் நினைவினை முன்னிட்டு சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் தலைவர் டி.எல்.சுதர்சன் அவர்களது குடும்பத்தினரது நிதி உதவி மூலம் உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அன்றாடல் கூலித்தொழில்செய்துவந்த குடும்பங்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டுவரும் நிலையில் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பல்வேறு உதவிகளை வழங்கிவருகின்றனர்.
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாண கிளையின் ஊடாக மட்டக்களப்புஇ திருப்பெருந்துறையில் உள்ள மிகவும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு 50 உலர் உணவுப்பொதிகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
சுவிஸ் உதயம் அமைப்பின் மட்டக்களப்பு இணைப்பாளர் திருமதி ரொமிலா செங்கமலன் தலைமையில் இந்த உலர்உணவுப்பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.