சுவிஸ் உதயம் அமைப்பின் பொங்கல் விழா

சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் புலம் பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழும் இலங்கையின் கிழக்குமாகாண மக்களை ஒன்றிணைத்து மிகப் பிரமாண்டமான முறையில்  ஏழாவது  தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் பொங்கல்    விழா- 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  காலை சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் டி.எல்.சுதர்சன் தலைமையிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அங்கத்தவர்களின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ்  நாட்டின் Primarschulhaus Bleiche strassl 3066 stettlen இல் நடைபெற்றது.

தமிழ் மக்களின் பாரம்பரியம் மிக்க பெருவிழாவான பொங்கல் விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த இவ்விழாவிற்கு சுவிஸ் நாட்டின் நாலா பாகங்களிலும் செறிந்து வாழும் வட கிழக்கு மக்கள் கலந்து கொண்டு சமய நிகழ்வுகளுடன் கூடிய பல்வேறான கலை கலாசார நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது பல்வேறான தமிழர்களின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டு இருந்ததுடன் பாரம்பரியம் மிக்க கலை கலாசாரப் போட்டிகள் நடைபெற்றன 

இந்நிகழ்வைச் சிறப்பிக்க இளையராகங்கள் அலோசியஜின் மின்னல் கரோக்கே இன்னிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம்பெற்று அனைவரது வரவேற்பையும் பெற்றிருந்தது

 அத்தோடு சுவிஸ் பேர்ன் நகரில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வில் பிரமாண்டமான முறையில் பொங்கல் பொங்கி சூரிய பகவானுக்கும்  படைக்கப்பட்டதன் பின்னர் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது உதயம் அமைப்பின் பொருளாளர் சமூகசேவகர் க.துரைநாயகம் உரையாற்றுகையில் 

இவ் விழாவினை ஒழுங்குசெய்த தலைவர் செயலாளர் மற்றும் எமது அங்கத்தவர்கள் அத்தோடு கலை கலாசார நிகழ்வுகளை ஒழுங்கு செய்த அன்பர்கள் குறிப்பாக விழாவிற்கு பாரம்பரிய உணவுகளைத் தயார் செய்த பேரின்பராசா,தியாகராஜா மற்றும் நிகழ்வைச் சிறப்பிக்க குடும்ப சகிதம் வருகை தந்த இளையராகங்கள்  மின்னல் இசைக்குழுவின் இயக்குநர் அலோசியஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்களுக்கும் புகைப்படக் கலைஞர்  மகோ மற்றும் அனைத்துப் பாடகர்களுக்கும்  பாரம்பரிய நடனத்தினை ஒழுங்குசெய்து நடாத்திய ஆசிரியை  அத்தோடு அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றியினைத்தெரிவிப்பதுடன் சகல வழிகளிலும் உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார் .

 

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

Related posts