சுவிஸ் உதயம் அமைப்பின் 2022 ஆம் ஆண்டில் முதலாவது நிருவாகசபைக் கூட்டம் 20 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Belpberg strasse-10, 3123 Belpஎன்ற முகவரியில் அமைந்துள்ள சுவிஸ் உதயம் அமைப்பின் அலுவலகத்தில் தலைவர் டி.எல்.சுதர்சன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
கொவிட் 19 தாக்கம் காரணமாக கடந்தவருடம் நிருவாகசபைக் கூட்டம் நடைபெறாத நிலையில் நீண்டநாட்களுக்குப் பிறகு இக் கூட்டம் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் அமைப்பின் செயலாளர் அம்பலவாணர் ராஜன் பொருளாளர் க.துரைநாயகம் பிரதித் தலைவர் க.தியாகராஜா பிரதிச்செயலாளர் எஸ்.சுவாஸ்கோ உதவிப்பொருளாளர் வி.பேரின்பராஜா நிருபாகசபை உறுப்பினர்களான ஜீ.கஜேந்திரன்,ப.ஜெயதரன், கு.தர்மபாலன், ஆகியோர் கலந்துகொண்டனர்
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு அறிக்கை பொருளாளரால் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் கிழக்குமாகாணக் கிளையின் வரவு செலவு அறிக்கைகளும் நிருவாகசபையிடம் சமர்ப்பிக்கப்பட்டது இதனை நிருவாகசபையினர் பார்வையிட்டு கணக்கறிக்கை சரியென உறுதிப்படுத்தினர். 2022 ஆம் ஆண்டு வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இதனை கிழக்குமாகாண நிருவாக சபையிடம் அனுப்பிவைக்கப்பட்டது.