பிரான்ஸில் இருந்து இரா.தில்லைநாயகம்
சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் சுவிஸில் நடைபெற்ற சதுரங்கப் போட்டி ஐரோப்பா மண்ணிலே 2007 ம் ஆண்டில் சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியம் என்னும் சதுரங்க அமைப்பை உருவாக்கி, சுவிசின் பல மாகாணங்களில் சதுரங்க பயிற்சிகளை வழங்கி தமிழர்களிடையே சதுரங்க அறிவை புகட்டி இருந்தது.
இத்தனை வேலைகளையும் தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் கந்தையா சிங்கம் அவர்களின் அயராத முயற்சியினால் புலம்பெயர்ந்து வாழும் அனைத்து தாயக உறவுகளையும் ஒன்று சேர்த்து விளையாட்டு வீரர்களை இனங்கண்டு அவர்களுக்கு பயிற்சி கொடுத்து தாயக வீரர்களையும் உலகலாவிய ரீதியில் சாதனைகளை படைக்க அயராது பாடுபட்டு உழைத்து வருகிறார்.
தனது பாடசாலை காலத்தில் விளையாட்டு நிகழ்வுகளில் மிகுந்த ஆர்வம் காட்டிய இவர் தற்போது தாயகத்தில் இருந்து புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்ற வேளையிலும் தனது நேரத்தில் ஒரு பகுதியை தன் இனத்திற்காக செலவழித்து சதுரங்கம் பூப்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளை தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பல நாடுகளில் தொடர்ந்து நடத்தி வருகிறார் அதனொரு பகுதியாகவே அண்மையில் சுவிட்சர்லாந்தில் சதுரங்க போட்டியினை நடத்தியிருந்தார்கள்
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பிய நாடுகளிடையே போட்டிகளை நடத்தி சதுரங்க வீரர்களை ஒருங்கிணைத்து இருந்தது. தவிர்க்கமுடியாத காரணங்களால் 6 வருடங்கள் போட்டிகள் நடைபெறாது இருந்து மீண்டும் ஆரம்பித்திருப்பது தெரிந்து பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தினால் 04.01.2020 ம் திகதி சுவிசில் சதுரங்கப் போட்டி நடத்தப்பட்டது. காலை அக வணக்கத்துடன் அதன் தலைவர் திரு சிறி மற்றும் செயலாளர் ஜெயபாஸ்கரன் அவர்களது சிறு உரையுடன் போட்டி ஆரம்பமானது.
சுவிஸ் தமிழர் சதுரங்க ஒன்றியத்தின் ஸ்தாபகர் கந்தையா சிங்கம் அவர்கள் போட்டியினை நெறிப்படுத்தி அமைதியான முறையில் மிகச் சிறப்பாக முடித்தார்.
தொழில் நுட்பவியலாளராக திரு தில்லைராஜ் அவர்கள் கடைபுரிந்தார். இப் போட்டியிலே சிறுவர் முதல் பேரியோர் வரை பங்குபற்றி இருந்தனர். 10, 13, 16, Open என நான்கு பிரிவுகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன. அத்துடன் சிறந்த பெண் போட்டியாளரும் தெரிவு செய்யப்பட்டார்.
சரியாக 10 மணிக்கு ஆரம்பமான இப் போட்டி 6 சுற்றுக்கள் நடைபெற்று மாலை 5 மணிக்கு இனிதே நிறைவடைந்தது. கலந்து கொண்ட வீர வீராங்கனைகள் மற்றும் பெற்றோர்கள் போட்டியின் ஒழுங்கமைப்பினை பெரிதும் பாராடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.