அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண விவசாய திணைக்களத்தின் கீழ் , சௌபாக்யா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக சேதன உர ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் அம்பாறை மாவட்டத்தில் பரவலாக இடம்பெற்றுவருகிறது.
அந்தவகையில், சேனைக்குடியிருப்பு பிரதேச கமநலசேவை உத்தியோகத்தர் மா.சிதம்பரநாதன் தலைமையில் சேனைக்குடியிருப்பு போதனாசிரியர் பிரிவிற்குட்பட்ட பிரிவில் சேதன பசளை உற்பத்தி தொடர்பான செய்து காட்டல் பயிற்சி வகுப்பானது விவசாய போதனாசிரியர் தியாகராஜா செந்தூரன் ஒழுங்கமைப்பில்; நடைபெற்றது.
இந் நிகழ்வில் ,மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர் எ.ஆர்.எம் சனீர் சம்மாந்துறை வலய உதவி விவசாய பணிப்பாளர் எ. எல். எம். சல்மான் சேதனப்பசளை உற்பத்தி தொடர்பாக விளக்கமளித்ததுடன் அப்பிரதேசத்திற்கான பிரதேசசெயலக திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் எஸ்.இராஜகுலேந்திரன் கிராம சேவகர் மற்றும் பல விவசாயிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
விவசாய அமைச்சின்கீழுள்ள கமநலசேவைத்திணைக்களம் மாகாண மற்றும் மத்திய விவசாயதிணைக்களம் பிரதேச செயலகம் மற்றும் கால்நடைஅபிவிருத்திதிணைக்களம் என்பன இணைந்து இச்சேதனைப்பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.