சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு

திருக்கோவில் பிரதேசத்தில் சௌபாக்கியா உற்பத்திக் கிராம வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு
 
100 விவசாய குடும்பங்களுக்கு சுமார் 38மில்லியன் பெறுமதியான விவசாய உபகரணங்களும் வழங்கி வைப்பு
 
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களது நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தின் கீழ் நாடுபூராகவும்  சௌபாக்கிய உற்பத்திக் கிராம நிகழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
 
அந்தவகையில் இவ் நிகழ்ச்சி திட்டமானது திருக்கோவில் பிரதேசத்தில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் தலைமையில் இடம்பெற்ற  இருந்ததுடன் நிகழ்வில் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாக டபில்யூ டி வீரசிங்க பிரதம அதிதியாக் கலந்து கொண்டு திருக்கோவில் பிரதேசத்தில் தங்கவேலாயுதபுரம்  கிராமத்தில் ஆரம்பித்து வைத்திருந்தார்.
 
இதன்போது சௌபாக்கியா உற்பத்தின் கிராமத்தில் முன்னெடுக்கப்படும் விவசாய உற்பத்தினை சந்தைப்படுத்துவதற்கான புதிய கட்டம் ஒன்று திறந்து வைக்கப்பட்டதுடன் விவசாய அமைச்சின் ஊடாக தங்கவேலாயுதபுரம் கிராமத்தில் 100 குடும்பங்களுக்கு தலா 83 ஆயிரம் பெறுமதியான நீர் இரைக்கும் பம்பிகள் மற்றும் சுமார் 17இலட்சம் பெறுமதியான 10 ஊடுசாகுபடி இயந்திரம் என்பனவும் கையளிக்கப்பட்டு இருந்தன.
 
இதனைத் தொடர்ந்து  சேதனை உரம் உற்பத்தி தொர்பாக விவசாயிகளுக்கு செய்கை முறையிலான விழிப்பூட்டல்களும் வழங்கப்பட்டு இருந்தன.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டபிள்யு.டி.வீரசிங்க கலந்து கொண்டு இருந்ததுடன்
 
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் கே.பாக்கியராசா உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் மாவட்ட உதவி திட்டமிடல் பணிப்பாளர் எச்.பி.அணிஸ் பிரதேச உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா விவசாய நவின மயமாக்கல் திட்டத்தின் பிரதி திட்டப் பணிப்பாளர் பி.எம்.என். தயாரெட்ன திட்ட அதிகாரி திருமதி ராதிகா ரவி மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக அதிகாரிகள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்

Related posts