ஜனநாயக இடதுசாரி முன்னணியின் ‘சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு’ கௌரவ பிரதமரிடம் வழங்கி வைப்பு
ஜனநாயக இடதுசாரி முன்னணி வெளியிடும் ‘சுபீட்சத்தின் நோக்கத்திற்கான மக்களை மையமாகக் கொண்ட வெளியீடு’ முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அவர்களினால் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் இன்று (07) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து வழங்கிவைக்கப்பட்டது.
தற்போதைய நாடு, மக்களை மையமாகக் கொண்ட அரசியல் வரலாறு, சுபீட்சத்தின் நோக்கிற்கு வழிவகுத்த பத்து கோட்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கை ஆகிய தலைப்புகளின் ஊடாக இந்த வெளியீட்டின் மூலம் ஜனநாயக இடதுசாரி முன்னணி விடயங்களை முன்வைத்துள்ளது.நல்லாட்சியின் போது இடம்பெற்ற உள்ளூர் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான விடயங்கள், ஏற்றுமதி பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகள், நாட்டின் நிதி அமைப்பின் வீழ்ச்சிக்கான காரணிகள், உள்ளூர் வர்த்தகம் வீழ்ச்சி, பொருட்களின் விலையேற்றம், வேலையின்மை மற்றும் வறுமை நிலையின் உயர்வு ஆகிய விடயங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் கயாஷான் நவனந்த உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.