ஜனாதிபதி ஓராண்டு நிறைவு, பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி வீரமுனையில் நிகழ்வுபிரதமரின் இணைப்பாளர் கருணா பங்கேற்பு: நீதிநூல்கள் உதவிகள் வழங்கல் மரக்கன்று நடல் .

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஸவின் ஒரு வருட கால பதவி நிறைவு மற்றும்  பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் 75 ஆவது பிறந்த தினம் ஆகியவற்றை முன்னிட்டு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட வழிபாடும் பெரும் நிகழ்வும   சிறப்பாக இடம்பெற்றது.
 
இந்து கலாசார திணைக்களத்தின் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரனின்  ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டலில்  அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   பிரதம மந்திரியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் கலந்துகொண்டார்.
 
ஆலயவிசேட புஜையினைத் தொடர்ந்து வீரமஐன சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் பெரும் நிகழ்வு மங்களவிளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமானது .பிரதம அதிதியான  பிரதம மந்திரியின் மட்டு அம்பாறை மாவட்ட இணைப்பாளர் விநாயகமூர்த்தி முரளிதரன்   இந்நிகழ்வில் மங்களவிளக்கேற்றினார். அதனைத்தொடர்ந்து வருகைதந்த மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் மற்றும் பிரதேசசெயலாளர்கள் மங்களவிளக்கேற்றிவைத்தனர்.
 
மேலும் வருகைதந்த மேலதிக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்இபிரதேசசெயலாளர்களுக்கு பிரதம அதிதியினால் நீதிநூல்கள் வழங்கிவைக்கப்பட்டது.
 
அதனைத்தொடர்ந்து சீர்பாத தேவி சிறுவர் இல்ல மாணவர்களுக்கு புத்தகப்பை மேலும் இந்து கலாசார திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட கொப்பிகளும் வழங்கிவைக்கப்பட்டன.
 
மேலும் வருகைதந்த அதிதி இமற்றும் மேலதிக அரசாங்க அதிபர்இஇராணுவஅதிகாரிஇ பிரதேச செயலாளர்களினால் வீரமுனை சீர்பாத தேவி சிறுவர் இல்லத்தில் நினைவாக மரக்கன்றுகள் நடப்பட்டதன.மேலும் இந்து கலாசார உத்தியோகத்தர்கள் இஅறநெறி பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

Related posts