ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைப்பு.
ஜேர்மனி உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் தையல் சுயதொழிலுக்கான உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 29 பாண்டிருப்பு 01 கல்முனையில் பயணாளி இல்லத்தில் அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் மனோரஞ்சினி தலைமையில் நடைபெற்றது.
இதன் போது யுத்தத்தினால் தனது கணவனை இழந்து பெண் தலைமைத்துவம் தாங்குகின்ற மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள எஸ்.சிவசாந்தி என்பவரது சுயதொழில் மேம்பாட்டுக்கான ஒரு லட்சம் ரூபா பெறுமதியான தையல் இயந்திரம் அதன் உதிரிப்பாகங்கள் மற்றும் தையல் துணிகள் என பல பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வானது நிறுவனத்தின் இலங்கைக்கான நிறைவேற்றுப்பணிப்பாளர் எம்.டிலான் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஜெயருக்சன் ஆகியோர் கலந்துகொண்டு இவ்வாழ்வாதார உதவியினை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.