ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் யுத்தத்தினால் இயல்பு நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் நிறுவனத்தின் மாவட்ட செயற்பாட்டாளர் பீ. சர்மிளா தலைமையில் 06ஆம் திகதி நடைபெற்றது.
இதன் போது திருமலை மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் கல்வி கற்கும் சுமார் 346 மாணவ மாணவிகளுக்கான பாடசாலைப் புத்தகப்பை கணிதபாட பெட்டி (கொம்பாஸ் பெட்டி) என்பன பின்வரும் பாடசாலைகள் அடிப்படையில் வழங்கி வைக்கப்பட்டன அந்தவகையில் கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் 152 பிள்ளைகளும் கிளிவெட்டி பாரதி வித்தியாலயத்தில் 194 பிள்ளைகளும் என 346 பிள்ளைகளுக்கு 332500 ரூபா செலவில் ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயற்பாட்டாளர்கள் மூலமாக உரிய மாணவர்களுக்கு கையளிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த பாடசாலை அதிபர்கள் எமது பிரதேசங்கள் உண்மையிலேயே முப்பது வருட காலமான நடைபெற்றுவந்த யுத்தத்தின் போது பல நூற்றுக்கணக்கான மக்கள் அசாதாரண நிலையிலிருந்து இயல்பு நிலை பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தனர்.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தை பொருத்தவரையில் கல்வி நிலை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது அவர்களுக்காக அதாவது கற்றலுக்கான வசதி வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளது அதனை இவ்வாறான தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மூலமாகவே நிறைவேற்ற முடியும் ஆகையினால் இவ்வுதவியினை வழங்கி வைத்த ஜேர்மன் உதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கும் அதன் செயற்பாட்டாளர்களுக்கும் எமது நின்றுகளை தெரிவித்துக்கொள்வதுடன் இக்கற்றலுபகரணங்களை நாம் பெற்றுக்கொண்டு கல்வி மட்டத்தை உயர்த்த முயற்சி எடுக்க வேண்டும் என கருத்தித் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.