கோழி இறைச்சி, டின் மீன், முட்டை மற்றும் கறுவாடு இறக்குமதியை நிறுத்துவதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம், விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக, மீன்பிடி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா, நேற்றைய தினம் (13) அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பினை வழங்கும் நோக்கிலும், உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்