களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட டெங்கற்ற சிறந்த மாதிரி பாடசாலைகளை தெரிவு செய்வதற்கான போட்டியில் மகிழூர் சரஸ்வதி வித்தியாலயம் முதலாமிடத்தினை பெற்றுள்ளது
டெங்கற்ற சிறந்த சூழலைக் கொண்ட பாடசாலைகளை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட இந்த போட்டியில் நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இந்த போட்டி நிகழ்வில் பங்குபற்றியிருந்தன.
போட்டியில் பாடசாலைகளை தேர்ந்தெடுப்பதற்காக சுதாரா வைத்திய அதிகாரி தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் நியமிக்கப்பட்டு அதன் அடிப்படையில் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது குறித்த குழுவினாரால் பாடசாலை சுற்றுப் புற சூழல் சோதனை உட்படுத்தப்பட்டு அதன் அடிப்படையிலையே குறித்த தேர்வு நடாத்தப்பட்டது
இதன் அடிப்படையில் மூன்று பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டது முதலாமிடத்தினை மகிழூர் சரஸ்வதி வித்தியாலயமும், இரண்டாமிடத்தினை கல்முந்தல் திருவள்ளுவர் வித்தியாலயமும்இ,மூன்றாமிடத்தினை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலமும் பெற்றுக் கொண்டது. இதன் போது பணப்பரீசிகளும் சான்றிதழ்களும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தினால் வழங்கப்பட்டது..