எமக்குக்கிடைத்த 50ஆயிரம் தடுப்பூசிகளை இருநாட்களுள் துரிதமாக ஏற்றியமைக்காக சுகாதாரஅமைச்சு பாராட்டுத் தெரிவித்ததுடன் ஊக்குவிப்பு பரிசாக மேலும் 40ஆயிரம் தடுப்பூசிகள் அன்பளிப்பாக இன்று(28) கிடைக்கவிருக்கின்றன. அதன்காரணமாக இன்று 1லட்சத்து 40ஆயிரம் தடுப்பூசிகள் இன்று கிடைக்கவிருக்கின்றன. நாளை(29) இரண்டாம்கட்ட தடுப்பூசி வழங்கல் மிகவும் துரிதமாக 13சுகாதாரப்பிரிவுகளிலும் ஆரம்பிக்கப்படும்
இவ்வாறு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்.குண. சுகுணன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
கிழக்கு மாகாணத்தில் இதுவரை நாளொன்றில் ஏற்றப்பட்ட அதிகூடிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 10ஆயிரமாவிருந்தது. ஆனால் எமது கல்முனைப்பிராந்தியத்தில் முதல் நாள் 20641 மறுநாள் 24560 என தினமும் 20ஆயிரத்தை தாண்டி சாதனைபடைத்தது. இதற்காக ஒத்துழைத்த சுகாதாரத்துறையின் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கின்றேன்.
கல்முனைப்பிராந்தியத்தில் 4லட்சத்து 88ஆயிரம் பேர் சனத்தொகையாகப்பதிவிடப்பட்டுளள் து. இவர்களில் 2லட்சத்து 50ஆயிரம் பேர் தடுப்பூசி பெற தகுதியாவர்களாவர். எனவே 5லட்சம் தடுப்பூசிகள் தேவையாகின்றன.
பிராந்தியத்தின் கணக்கெடுப்பின்படி 60வயதுக்கு மேற்பட்டவர்கள் 51ஆயிரம் பேரா
வர். ஆசிரியர்கள் 85000பேருள்ளனர். அரசஊழியர்கள் 15ஆயிரம் பேருள்ளனர். முப்படை பொலிசார் 2500பேரம் கர்ப்பிணித்தாய்மார்கள் 1500பேரும் உள்ளனர்.
இந்தநிலையில் முதலில் கிடைக்கப்பபெற்ற 50ஆயிரம் தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஏற்றப்பட்டுள்ளன.
மேலும் விரைவில் அடுத்ததொகுதி தடுப்பூசிகள் வந்துசேர்ந்தவுடன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றும்பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.