தனிமைப்படுத்தப்பட்டிருந்த வயோதிபர் மரணத்தில் கொரோனா தொற்று இல்லைபிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழடித்தீவு (தெற்கு) பிரதேசத்தைச் சேர்ந்த வயயோதிபர் ஒருவர் அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் நேற்று(11) மாலை தீடீரென மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் கடந்த மாதம் வயல் வேலைக்காக வேலன் இளையதம்பி (62) என்பவர் பொலநறுவைப்பிரதேசத்திற்கு வேலைக்கு சென்று சுகயீனம் அடைந்த நிலையில் தனது வீடு திரும்பியிருந்த போது அவரின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் சம்பவ தினமான நேற்று திடீரென மயக்கமடைந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.
 
பின்னர் மரணமானவரின் உடல் பொது சுகாதார பரிசோதகர்கள்,பொலிஸாரினால் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக பொதி செய்யப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.பின்னர் பீ.சீ.ஆர் பரிசோதனையின் முடிவு மரணமானவருக்கு கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டதனையடுத்து
 
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அவர்களின் உத்தரவிற்கமைவாகவும் சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்ட பின்னர் பிரேதத்தை பிரேத பரிசோதனை செய்யும் படி உத்தரவிட்டார்.சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணமானவர் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
 

Related posts