பொதுத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு எதிர்பார்த்துள்ள அரச ஊழியர்களுக்கு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் 16 வரையான காலப்பகுதியில் வழங்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்
இந்த மாதம் 6 ஆம் திகதி முதல் 16 வரையான காலப்பகுதியில் இதற்கான விண்ணப்பங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
விண்ணப்பங்களை தேர்தல் மாவட்டங்களிலுள்ள தேர்தல்கள் அலுவலகங்களில் கையளிக்க முடியும்.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 2019 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.