(காரைதீவு நிருபர் சகா)
இந்துசமயவிவகார அமைச்சின் இந்துகாலாசாரத்திணைக்களம் முதன்முதலாக நடாத்தும் ‘தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019’ நேற்று (2) திங்கள் மாலை கொழும்பு தாமரைத்தடாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது..
இந்துசமயஅலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் வரவேற்புரையாற்றினார். அமைச்சர் மனோகணேசன் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டு கலைஞர்களை கௌரவித்தார்.இ.கி.மிசன் இலங்கைக்கான தலைவர் சுவாமி அக்சராத்மான்ந்தா ஜீ பேராசிரியர் சோ.சந்திரசேகரம் பாராளுமனற் உறுப்பினர்களான வேலுகுமார் அரவிந்தகுமார் ஆலோசகர் உடுவை தில்லைநடராஜா உள்ளிட்ட பிரபலங்கள் பரிசளிப்புவிழாவில் பங்கேற்றனர்.
இடையிடையே கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மேடையேறி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது. ஸ்ருதி பிரபாவின் இசையில் ஈழத்துப்பாடல்கள் பாடப்பட்டன. பின்னணியில் நான் உங்கள் தோழன் வாடைக்காற்று புதியகாற்று போன்ற படங்கள் காணொளியில் திரையிடப்பட்டன. தமிழ்க்லையுலகின் முன்னோடிகள் பலரின் படங்கள் காணொளியில் திரையிடப்பட்டன. தம்பிஜயாதேவதாஸ் தொகுத்த ஈழத்துத்திரைப்படங்களின் தொகுப்குமட்ம் தரையிடப்பட்டது.
தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலின் கீழ் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இவ்விருதுவழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தது.சுமார் ஒருமணிநேரம் தாமதித்து ஆரம்பித்தபோதிலும் 5மணிநேரம் இவ்விழா சிறப்பாக இடம்பெற்றது.
தமிழர்தம் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளைத் தனியே பேணிப் பாதுகாத்து ஊக்குவித்துத் தம் வாழ்நாளிற் பெரும் பகுதியை இக் கலைகளுக்காகவே அர்ப்பணித்து வாழுகின்ற கலைஞர்களை அங்கீகரித்தும் வளரும் இளங் கலைஞர்களை ஊக்குவித்தும் ‘தமிழர் பாரம்பரிய மற்றும் நவீன கலைகள் – கலைஞர்களுக்கான அரச விருது வழங்கும் விழா – 2019’ எனும் பெயரில் நடாத்தப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் அருளானந்தம் உமாமகேஸ்வரன் தெரிவித்தார்.
இவ்விழாவில் மூத்த கலைஞர்கள், நின்று நிலைக்கும் சேவையை இன்றும் வழங்கும் கலைஞர்கள், வளரும் இளம் கலைஞர்கள் என்ற அடிப்படையிலே கலைஞர்களுக்குக் கலையரசு விருது கலைமாமணி விருது, கலைச் சுடர் விருது, கலை இளவரசன் கலை இளவரசி விருது என விருதுகள் வழங்கி 222 கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டனார்.
இந்த 210கலைஞர்களோடு மேலும் 12வாழ்நாள் சாதனையாளர்களும் கௌரவிக்கப்பட்டனனர்.வாழ்நாள்ள் சாதனையாளர்கள் பெரும்பாலும் நடைதளர்ந்தநிலையிலும் ஊன்றுகோலிலும் சிரமத்தின்மத்தியில் மேடையேறி விருது பெற்றமை பலரையும் நெகிழச்செய்தது.