தமிழ்மக்களின் நல்லெண்ணங்களுங்கு மதிப்பளித்து அவர்களின் அடிப்படைப்பிரச்சனைக்கு தமிழ் அரசியல்வாதிகள் முனைப்புடன் செயற்பட வேண்டும்.இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவிப்பு

அடுத்த அடுத்த கட்டங்களில் கிராமிய வீதிகள் கிராமிய பாலங்கள் செப்பனிடவேண்டியுள்ளது. ஒரு வருட காலத்தினுள் அரசாங்கம் பல வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.குடிநீர் அற்றோருக்கு குடிநீர்த்திட்டத்திற்கான வேலைகள் நடைபெறுகின்றது. மட்க்களப்பு மாவட்டத்தில் ஒரு வருடகாலப்பகுதியில் 15தேசிய பாடசாலைகளை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம்.

உலக நாடுகளில் 50 நாடுகளுக்கு மேல் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்முடியாமல் உள்ளார்கள்.தடுப்பூசிகளுக்கு  தட்டுபாடு உள்ளது.எமது நாட்டில் சீனா,அமெரிக்கா, இந்தியா,போன்ற நாடுகளில் இருந்து தடுப்பூசிகளை அரசாங்கம் கொண்டு வந்துகொண்டிருக்கின்றது. இன்னும் தடுப்பூசிகள் நாட்டுமக்களுக்கு வழங்கவேண்டும் என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதுடன் கொரோனோ தொற்றிலிருந்து நாட்டுமக்களை பாதுகாப்பதில் துரித கவனம் செலுத்தி வருகின்றது.

புன்னக்குடாவிலே 265 ஏக்கர் பரப்பில் தொழிற்சாலைக்கான கட்டுமாணப்பனிகள் நடைபெறுகின்றன.அந்தக்காணியைக்கூட பாதுகாக்க நாம் அந்த இடத்தில் போராடினோம்.பல தனியார்கள் அந்த காணியைப் பிடித்தார்கள்.காணி ஆணையாளர் விமல்ராஜ் அவர்களை சுட்டார்கள்.அந்த காணியை பாதுக்காத்ததால் அங்கு தொழிற்சாலை அமைக்கப்படுகின்றது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் தேர்தல் காலத்தில் மிகக்கடுமையாக சண்டைபிடிப்பார்கள்.சமூகத்தில் பிளவுகள் நடைபெறும்.ஆனால் தேர்தல் முடிந்ததும் தேர்தல்கால வன்முறைகளை மறந்து ,தனது சமூகத்திற்காக ஒற்றுமையாக செயற்படுவர்.இதை ஒரு சில தமிழ் அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.தமிழ்மக்களின் சமூகத்தில் தமிழ் அரசியவாதிகள் தமிழ்மக்களின் தூரநோக்குடன் சிந்தித்து செயல்பட வேண்டும்.நாட்டிலே போராட்டத்தில் மரணித்த மக்களின் உடல்களில் ஏறிக்கொண்டு அரசியல் செய்வதை தமிழ்தலைமைகள் நிறுத்தி தமிழ்மக்களின் நல்லெண்ணங்களுங்கு மதிப்பளித்து அவர்களின் அடிப்படைப்பிரச்சனைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செயற்பட வேண்டும் எனத்தெரிவித்தார்.

Related posts