தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாவட்டத்தில் முதலிடம் பெறும் புலமையாளருக்கு பைசிக்கிள்! – வலயக்கல்விப் பணிப்பாளர்

எதிர்வரும் தரம்5 புலமைப்பரிசில் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் முதல்இடத்தைப்பெறும் சம்மாந்துறை வலய மாணவருக்கு துவிச்சக்கரவண்டியொன்றை வழங்க சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனை முன்வந்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தலை சம்மாந்துறை வலய அதிபர்கள் கல்விசார் உத்தியோகத்தர்களுக்கு அலுவலக ‘டுவீற்றர்’ ஊடகவலையமைப்பு செய்தி மூலம் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் அறிவித்துள்ளார்.

பரீட்சைக்கு இன்னும் 4தினங்கள் இருக்கையில் இவ்வறிவித்தல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் 5ஆம் திகதி தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை நாடளாவியரீதியில் நடைபெறவிருப்பது தெரிந்ததே.
இம்முறை சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை தரம் 5புலமைப்பரிசில் பரீட்சையில் கூடுதலாக அடைவுமட்டத்தைப் பெறுவதற்காக பல விசேட நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

அதன் இறுதிக்கட்ட முயற்சியாக மாணவர்களை ஊக்குவிக்குமுகமாக இவ்வறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என பணிப்பாளர் நஜீம் தெரிவித்தார்.
இதேவேளை சம்மாந்துறை கோரக்கர்தமிழ் மகாவித்தியாலய புலமைப்பரிசில் பரீட்சைக்குத்தோற்றவிருக்கும் மாணவரின் பெற்றோருக்கான இறுதிக்கூட்டம் இன்று(1) காலை பாடசாலையில் நடைபெறவிருக்கின்றது.

Related posts