இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் திருக்கோவில் பிரதேச உள்ள 23 அறநெறி பாடசாலைகளைச் சேர்ந்த 86 ஆசிரியர்களுக்கான புதிய சீருடையும், நாயன்மார்களின் உருவப் படங்களும் வழங்கி வைக்கப்பட்டன..
திருக்கோவில் பிரதேச
செயலக கலாச்சார அபிவிருத்தி உத்தியோத்தர் நிஷாந்தினியின் ஒழுங்கமைப்பில் ,திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இந் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து சிறப்பித்ததுடன், ஆன்மீக அதிதியாக திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலய குரு சிவஸ்ரீ.அங்குசநாத குருக்கள் கலந்து கொண்டு
உரைநிகழ்த்தினார்…
நிகழ்வில் திருக்கோவில் பிரதேச உதவிச்செயலாளர் க.சதிசேகரன், சிரேஷ்ர நிருவாக உத்தியோத்தர் கே. மோகனராஜன், நிருவாகபிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோத்தர்.ஆ.சசிந்திரன்,
மாவட்ட கலாச்சார உத்தியோத்தர்களான கே .ஜெயராஐ் ,திஎன்.. பிரதாப்,திருக்கோவில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோத்தர் நிஷாந்தினி ஆலையடி வேம்பு கலாச்சார உத்தியோத்தர்
ரி. சர்மிலா மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் என பலர் இன் நிகழ்வில் கலந்து கொண்டு இவ் சீருடையும் இந்து சமய நாயன் மார்களின் உருவ படங்கள் என்பவற்றை வழங்கி வைத்தனர்…