திருக்கோவில் பிரதேசத்தில் பயணக்கட்டுப்பாட்டு விதிகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் வீதி சோதனைகள் முன்னெடுப்பு
அம்பாரை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் பிரதேசத்தில் அரசின் பயணக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் திருக்கோவில் பிரதேசத்தில் வீதி சோதனைகள் முன்னெடுக்கப்பட:டு இருந்தன.
இவ் வீதி சோதனைகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் மற்றும் திருக்கோவில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சீஜ.பி.திலகரெத்தின ஆகியோரின் ஆலோசனைக்கு அமைய இன்று திங்கட்கிழமை (14) இடம்பெற்று இருந்தன.
இதன்போது பிரதான வீதிகளில் பயணம் செய்த வானங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரது பயண அனுமதி பத்திரங்கள் பரிசோதிக்கப்பட்டு இருந்ததுடன் முககவசங்கள் முறையாக அணியாத நபர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டு இருந்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்தம் வீதிகளில் தேவையற்ற முறையில் நடமாடுபவர்கள் முறையாக பயண அனுமதிகள் பெற்றுக் கொள்ளாத நபர்கள் மீது எதிர்வரும் நாட்டகளில் பொலிசாரின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்து இருந்தார்.
இவ் வீதி சோதனையில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் திருக்கோவில் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் திருக்கோவில் பிரதேச செயலக கொவிட் 19 கட்டுப்பாட்டு செயலணிக் குழு உத்தியோகத்தர்கள் ஆகியோர் மேற்படி வீதிச் சோதனைகளை முன்னெடுத்து இருந்துடன் இவ் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.