மட்டக்களப்பில் சுய உதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மூலம் சுமார் 1400 பேர் பயன் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மூலம் மட்டக்களப்பில் சுய உதவிக் குழுக்கள் ஊடாக சுமார் 1400 பேர் பயன் பெற்றுள்ளனர் என அம்கோர் சர்வதேச
தன்னார்வ உதவி நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2015 தொடக்கம் 2018 காலப்பகுதியில் முறையற்ற விதமாக புலம்பெயர்பவர்களை கட்டுப்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளினூடாக பெறப்பட்ட வெற்றிகள் மற்றும் இத்திட்டத்தின் மூலம் மனித சமூக பொருளாதார மூலதனங்களை அம்கோர் நிறுவனம் எவ்வாறு கட்டியெழுப்பியுள்ளது என்பன பற்றி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுடன் நடாத்தப்பட்ட கலந்துரையாடலில் இவ்விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முறையற்ற விதமாக புலம்பெயர்பவர்களை கட்டுப்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஊடாக பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் திறன் விருத்தி செயற்பாடுகள் மற்றும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தல் போன்ற செயற்பாடுகளினூடாக ஊடாக 90 குழுக்களை சேர்ந்த 914 பெண்களும் 468 இளைஞர் யுவதிகளும் பயனடைந்துள்ளார்கள்.
அத்துடன் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அவர்களுடைய பொருளாதார தேவைகளில் தன்னிறைவுடன் இருப்பதன் காரணத்தால் இவர்கள் தேவையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் ஈடுபடுதல் மிகவும் குறைந்துள்ளது. இது தற்போதைய காலகட்டத்தில் மிகவும் தேவையான ஒன்று எனவும் குறிப்பிடப்பட்டது.
இதன் போது அரசாங்க அதிபர் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேவைகளும் எதிர்கால மாவட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியதுடன் இனிவரும் காலங்களில் முறையற்ற நுண்கடன் செயற்பாடுகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டங்களை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என்னும் அணுகுமுறை மூலம் செயற்படுத்துதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மட்டக்களப்பிற்கு வருகை தந்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் உயரதிகாரிகள் கடந்த காலங்களில் அம்கோர் நிறுவனத்தால் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் அமுல்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அபிவிருத்தியும் பாதுகாப்பற்ற புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தலும் என்னும் திட்டத்தின் தற்போதைய செயற்பாடுகளை மட்டக்களப்பு மாவட்டத்தில் பார்வையிட்டனர்.