(சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராஜா)
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் தனது சமூக ஆய்வு விடயமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (18-08-2019) இங்கிலாந்து நோக்கி ஒரு வார கால பயணத்தை மேற்கொண்டுபயணமானார்.
இங்கிலாந்து நெபியார் பல்கலைக்கழகத்தினால் ( Napier University) வழங்கப்பட்ட ஆய்வு போட்டி நிதியை (Competitive Research Grant), வென்றதன் மூலம் “கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் சமூக பொருளாதார வலுவூட்டல்” என்ற சமூக ஆய்வை இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரோடு சேர்ந்து தற்போது மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு அங்கமாகவே இந்தப்பயணம் அமைகிறது. இப்பல்கலைக்கழக ஆய்வு நிதியை பெற்றுக்கொண்ட மூன்று இலங்கை பல்கலைக்கழக விரிவுரையாளர்களுள் இவரும் ஒருவராவார்.
பல்வேறு நூல்கள், ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ள இவர், வளர்ந்து வரும் சிறந்த சமூக செயற்பாட்டாளருமாவார்.
தெ.கி.ப.கத்தில் கலை கலாசார பீடத்தில் கற்று அப்பீடத்திற்கே பீடாதிபதியாகி அண்மையில் வரலாற்று சாதனை படைத்திருந்தார்.
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் இவர், சாய்ந்தமருதை பிறப்பிடமாக கொண்டவராவராவர்.