தேடல் கலை இலக்கிய அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழா 08-12-2019 ஞாயிற்றுக் கிழமை திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் கவிமாமணி வை.கே.ராஜூ அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் கவிஞர்களுக்கான கவிநிலா,கவிநதி,கவியரி, கவி அலரி,கவி அனலி போன்ற 65 விருதுகளும் மற்றும் நினைவுச் சின்னங்களும் வழங்கப் பட்டது.
08-12-2019 பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான தேடல் கலை இலக்கிய அமைப்பின் 2ம் ஆண்டு நிறைவு விழாவில் “எதைப் பாடுவேன்” என்ற தலைப்பில் கவிமணி அம்.கௌரிதாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
எம்.எஸ்.எம்.பர்சான் அவர்களின் சாதனை நிகழ்வுகள் விழாவினை அலங்கரித்தமையும், இளம் அறிவிப்பாளர் வி.ஜருஷி அவர்களின் நிகழ்ச்சி தொகுப்பும் மற்றும் தேடல் அமைப்பின் தலைவர் நாவிதன்வெளியைச் சேர்ந்த வை.கே.ராஜூ அவர்களையும், அமைப்பின் நிறுவனர் கிண்ணீயாவைச் சேர்ந்த கவிப்புலரி கௌ.மோகனகௌரி அவர்களையும் புத்தொளி கலை இலக்கிய அமைப்பின் நிறுவனர் நஸீரா எஸ் ஆப்தீன் அவர்கள் கலைமணி விருது வழங்கி பொன்னாடை வழங்கிக் கௌரவித்தார், அத்தோடு நுட்பம் பாயிஸா நௌபல் அவர்களும் தேடல் நிறுவனை பொன்னாடை போத்தி கௌரவித்தார்கள்.
இவ்விழாவினை சிறப்பிக்க இலங்கையில் உள்ள அதிகளவான கவிஞர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத் தக்கது.