மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று காலை தைப் பொங்கல் விழாவும் கலாச்சார கூடமும் புதிய மாவட்ட அரசாங்க அதிபர்; திருமதி கலாமதி பத்மராஜா அவர்களினால் கலாச்சார கூடம் திறந்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பழம் பெரும் தொன்மையினை பிரதிபலிக்கின்ற பொருட்கள் மற்றும் கலை கலாச்சாரத்துடன் தெடர்பான பொருட்களும் இக் காட்சிக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்;தக்க அம்சமாகும்.
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் கலாச்சார திணைக்களகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரும் பொருட்களை காட்சிப்படுத்தும் முகமாக இக் கால்சார கூடம் அமைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பாவிக்கப்பட்ட பழமை வாய்ந்த பொருட்களின் ஒன்று கூடமாக இது அமைந்துள்ளது.இது தற்கால இளம் சமூகத்தினருக்கும் மாடசாலை மற்றும்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணமும் வரலாற்றுச் சிறப்பினையும் தொன்மையினையும் பிரதிபலிக்கும் கலாச்சார கூடமாவே எதிர்காலத்தில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன்,மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.