தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பான கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மக்களை ஏமாற்ற முடியாது என அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்படவிருக்கும் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக லிந்துலை ஹென்போல்ட் தோட்டத்தில் 50 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர். தேயிலையின் விலை உயர்ந்து காணப்படுவதால், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஏமாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், மலையக தொழிலாளர்களுக்காக யார் போராட்டத்தில் ஈடுபட்டாலும் அதற்கு தாம் உறுதுணையாக செயற்படுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.