பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் இறப்புக்காக நீதி வேண்டி. நடுநிலையான விசாரணை நாடாத்த வேண்டும்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கொடி பிடித்தவர்கள்,முட்டு கொடுத்தவர்கள் இன்று அந்த விடயம் பற்றி வாய்திறக்காமல் உள்ளனர்.வறுமையை காரணம் காட்டி இந்த சிறுமி இறந்தமை தொடர்பில் அவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்பது எமக்கு தெரியவில்லை? என தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.
பிரதமரின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் மத்தியில் வறுமைக் கோட்டின கீழ் வாழும் குடும்பம் ஒன்றிற்கான 7 இலட்சம் ருபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்…
வறுமை காரணமாக ரிசாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலை செய்ய சென்ற மலையக சிறுமி எரிகாயங்களுடன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.இது நடந்தது கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியமான அமைச்சரின் வீட்டிலேயாகும். வறுமையை காரணமாக காட்டி வேலைக்கமர்த்தப்பட்டு இன்று பரிதாபகரமாக இச்சிறுமி உயிரிழந்துள்ளார்.இறந்த அந்த சிறுமிக்காக நீதி வழங்கப்படவேண்டும்.கடந்த அரசாங்கத்தில் நல்லாட்சிக்காக கொடி பிடித்தவர்கள்,முட்டு கொடுத்தவர்கள் இன்று அந்த விடயம் பற்றி வாய்திறக்காமல் உள்ளனர்.வறுமையை காரணம் காட்டி இந்த சிறுமி இறந்தமை தொடர்பில் அவர்கள் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்பது எமக்கு தெரியவில்லை?.
எமது தலைவர். சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நாம் பாதிக்கப்பட்ட அந்தசிறுமியின் இறப்புக்காக நீதி வேண்டி நிற்போம்.ஜனாதிபதியின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு சென்று அந்த சிறுமியின் நீதிக்காகவும்,நடுநிலையான விசாரணை நடைபெற வேண்டுமென்றும் நாம் பாடுபடுவோம்.பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கும், சிறுவர்களுக்கெதிரான குற்றங்களுக்கும் கெதிரான தனியான நீதிமன்றம் வேண்டுமென நாம் கடந்த காலத்தில் குரல் கொடுத்தோம். ஆகவே குற்றம் செய்த அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை என
தமிழ்மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் பிரதமரின் சௌபாக்கியா திட்டத்தின் கீழ் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவிட்குட்பட்ட கிரான்குளம் மத்தியில் வறுமைக் கோட்டின கீழ் வாழும் குடும்பம் ஒன்றிற்கான 7 இலட்சம் ருபா பெறுமதியான புதிய வீட்டிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
மண்முனைப்பற்று ஆரையம்பதி தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் அமைப்பாளர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(23)இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலக உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்ட இந் நிகழ்வு சுகாதார முறைப்படி இடம்பெற்றது