நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை சகல பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்து தரமுயர்துவோம் என நாங்கள் உறுதிமொழி வழங்குகின்றோம். அதேவேளை காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாது விவசாயம் மேற்கொண்டு வருகின்ற விவசாயிகளுக்கு காணி உரிமத்தை பெற்றுத்தருவோம்.என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் எதிக்கட்சி தலைவருமான மகிந்த ராஜபஷச தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் மட்டக்களப்பு கல்லடியில் செவ்வாய்க்கிழமை (29) மாலை 6.00 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர்
எஸ்.வியாழேந்திரன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்ட எதிக்கட்சி தலைவர் மஹிந்த ராஜபஷச இவ்வாறு தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, நுவான் ரத்வத்த. முன்னாள் பிரதியமைச்சர் வி.முரளிதரன் (கருணா அம்மான்),வடகிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ்.வரதராஜப்பெருமாள், தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
கொட்டுகின்ற மழையில் எனக்காக அமைதியாக காத்திருந்ததற்கு முதலில் நன்றிகள்.ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபஷ விளக்கமளித்தார். அதே போன்று அனைத்து சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மாவட்டத்திவே நீங்கள் சவாலக வாழ்வது நமக்கு ஒரு பலம்.
எம்மீது அரசியல் பழிவாங்கலால் பல்வேறு வழிகளில் நடக்கின்றது.சிஜடி இங்கு ஒவ்வொரு நேரம் வந்து விசாரணை செய்கின்றது சிலரை சிறையில் அடைக்கின்றார்கள்.சிஜடி பொறுப்பதிகாரி மாதத்துக்கு ஒருதடவையாவது எம்மை கைது செய்ய வேண்டும் என்கின்ற நோக்கத்தோடு இப்படி பல அரசியல் பழிவாங்கல் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறு பல்வேறு துன்பங்களுக்குள்ளான ஒரு நாட்டைத்தான் இங்கு பார்க்கின்றோம்.
இந்த நிலையில் இந்த அரசாங்கம் நாட்டுக்கே மக்களுக்கே ஒன்றுமே செய்யவில்லை.ஏனைய தலைவர்கள் அரசாங்கத்துக்கு செம்பு தூக்கி பந்தம் பிடித்து வருகின்றனர்.அந்தவகையில் வியாழேந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டு விலகி உள்ளதையிட்டு நாங்கள் சந்தோஷமடைகின்றோம்..
உங்களுக்கு இருக்கின்ற நாளாந்த பிரச்சனைகளுக்காக போரட்டங்கள் நடத்துகின்றீர்கள்.உங்கள் பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் அறிவோம்.நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கல்முனை வடக்கு பிரதேச பிரதேச செயலகத்தை தரமுயர்துவதாக நாங்கள் உறுதிமொழி வழங்குகின்றோம். அதுமட்டுமல்ல காணிகளுக்கு உரித்தான உரிமம் இல்லாமல் விவசாயம் மேற்கொண்டுவருகின்ற விவசாயிகளுக்கு அதனை அதனை பெற்றுத்தருவோம்.
நாங்கள் யுத்தத்தை செய்து கொண்டே இந்த மாகாணத்தில் அபிவிருத்தியை செய்தோம். கல்லடி பாலம்,மண்முனை பாலம் போன்றவற்றை செய்து காட்டியுள்ளோம்.இன்று திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பிற்கு பிரயாணிக்க 5 மணித்தியாலம் தேவைப்பட்டது.இப்பொழுது ஒன்றரை மணித்தியாலத்தில் சென்றுவிடலாம்.கிண்ணியா பாலம் அமைத்தபடியால். இவ்வாறு பல அபிவிருத்திகளை நாங்கள் செய்தோம்.
மட்டக்களப்பு மக்கள் இந்த தேசத்தில் தலை நிமிர்ந்து நிம்மதியாக வாழவேண்டும். அதை நாம் செய்வோம்.நாம் சொல்வதை செய்வோம். செய்வதை சொல்வோம். எனவே உங்கள் சின்னம் மொட்டுச் சின்னத்துக்கு வாக்களிக்கவும் என அவர் தெரிவித்தார்.