நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக அதிகரித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி மேல், சதென்மேற்கு பருவமழை படிப்படியாக பரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல பகுதிகளிலும் காலி, களுத்துறை, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் நுவரெலிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 50 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலனறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்சுடுமெனவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் தருணங்களில் காற்றின் வேகமானது மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் அதிகரிக்கலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது