பாடசாலைக்கு நாளை(செவ்வாய்கிழமை) மாணவர்களை அனுப்பி வைக்குமாறு பெற்றோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
முப்படைகள் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இதன்காரணமாக எவ்வித அச்சமும் இன்றி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும் அவர் கோரியுள்ளார்.
கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து அச்ச சூழல் நிலவி வருகின்றது.
இதன்காரணமாக பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.
குறிப்பாக கடந்த வாரம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருந்தாலும், மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.