நான் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரானவரல்ல ஆனால் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வில்லை


நான் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரானவரல்ல ஆனால் அவர்களின்கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வில்லை
முன்னாள் பிரதியமைச்சரும்இ ஐ.தே.கட்சியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி
நான் எப்பொழுதும் தமிழ் தேசியகூட்டமைப்புக்கு எதிரானவரல்ல ஆனால் அவர்களின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை கடந்த தேர்தலிலே ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டதன் பயனாகவே நாங்கள் இவ்விடத்தில் இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது இங்கு அமர்ந்துள்ள அமைச்சர் அமிர் அலி அவர்கள் இந்ந மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும்மென்பதே எனக்கும் அவருக்குமுள்ள நீண்டநாள் அவா அதனால்த்தான் நான் அவருடன் இணைந்து அபிவிருத்திகளை செய்வதற்கு இருக்கின்றேன் அவர் எவ்விதமான இனஇமதஇமொழிவேறுபாடுகள் இன்றி எங்களது மக்களுக்க சேவைசெய்யும் மனிதாராக இருக்கின்றார்   என பட்டிருப்பு தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான சோ.கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வினை போரதீவுப்பற்று கிராம மக்கள் மற்றும்இ மண்டூர் காவேரி மகளீர் அமைப்பு ஆகிய அமைப்புக்கள்  ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்வில்   விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதார இராஜங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ் அமீர் அலி மற்றும் முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்பு தொகுதியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி அமைச்சின் பிரத்தியோக செயலாளர்கள் பிரதேச சபையின் பிரதேச உறுப்பினர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்  அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் மக்களிடத்தில் வாக்குக்களை பெற்றுக்கொள்வதற்காக  பயனாளிகளுக்கு இந்தப் பொருட்களை கொடுக்கின்றோம் என்று அப்படியல்ல அண்மைக்காலமாக எங்களது மட்டக்களப்பு மாவட்டத்திலே பட்டிருப்பு தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியினர் தேர்தல்களில் வெற்றிகளை பெற்று வருகின்றனர் எங்களது மக்கள் இப்போது உன்மையான யதார்தத்தினை புரிந்து கொண்டுள்ளார்கள் எங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்திகளும் நடைபெறவேண்டுமென்பதே. 2000 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க அவர்களினால் சமர்ப்பிற்கப்பட்ட மாகாண பிராந்திய சபைகள் என்கின்ற மசோதா பராளுமன்றத்திலேயே சமர்ப்பிற்கப்பட்டபோது நான் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். 
நான் எப்பொழுதும் அரசாங்கத்திற்கு சார்பாக பேசுவதில்லை எங்களுடைய தமிழ் மக்களின் அவலங்கள்இகஷ்ரஙகள் அவர்களின் அரசியல் தீர்வுகள் நிறைவேற்ப்படவேண்டும்.அன்று சந்திரிக்கா அம்மையாரினால் சமர்ப்பிக்கப்பட்ட அரசியல் பொதி நெருப்பிலே கொழுத்தப்பட்டு எங்கள் முன் எதிர்கட்சியினரால் எறியப்பட்டது. அன்று அங்கு நான் கூறினேன் நீங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை எரிக்கின்றீர்கள் என்று கேட்டேன். எனவே தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் குரல் கொடுக்கவில்லை நாங்களும் இன்று வரை அந்த தீர்வினை கேட்டு வருகின்றோம் எனத் தெரிவித்தார்.
1994 ஆம் ஆண்டிலே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலே தனித்து நின்று போட்டியிட்டு எண்ணூறுவாக்குக்களால் தோல்வியடைந்தேன். ஆனால் சுமார் இருபதாயிரத்திற்கும் மேலான வாக்குக்களை பெற்றிருந்தேன்.அன்று நான் ஒரு கல்விப்பணிப்பாளராக கடமைபுரிந்திருந்த நிலையிலே தான் அரசியலில் ஈடுபட்டேன் காரணம் எங்களது மாவட்டத்தின் எதிர்கால நிலமை மற்றும் மக்களின் அபிவிருத்தி பற்றிய தேவைகளின் நோக்கமே இதைத்தவிர எங்களது குடும்பத்தின் கௌரவத்திற்கோ எங்களது தேவைகளுக்கோ இல்லை  எனத் தெரிவித்தார்.

Related posts