நாளை கதிர்காமத்தில் ஆடிவேல் விழாவிற்கான கன்னிக்கால் நடும் சடங்கு !

யூலை 6 இல் கொடியேற்றம்; 22இல் தீர்த்தம்.

 
 
வரலாற்று பிரசித்தி பெற்ற  கதிர்காமம் கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவத்தின் மாங்கல்ய சடங்கு  கன்னிக்கால் அல்லது முகூர்த்த கால் அல்லது பந்தல்கால் நடும் நிகழ்வு நாளை (24)  வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறவிருக்கிறது. 
 
கதிர்காம கந்தன் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டிஷான் குணசேகர தலைமையில் இந் நிகழ்வு இடம்பெறவிருக்கிறது.
 
முகூர்த்தத்தில் நாளை அதிகாலை, பழங்கால முறைப்படி வெட்டப்பட்ட கம்புகள், மாணிக்க ஆற்றில் குளிப்பாட்டப்பட்டு, இன்று இரவு வள்ளி அம்பாள் திருக்கோவில்  வைக்கப்பட்டு நாளை  காலை சுப முகூர்த்தத்தில் வள்ளி அம்மன் ஆலயத்திலிருந்து குழுவினர் கந்தன் ஆலயத்திற்கு எடுத்துச் செல்வார்கள்.
 
கதிர்காமம் பெரிய ஆலயத்தில் இக் கன்னிக்கால் அதிகாலையில் நிலமே முன்னிலையில் பக்தி பூர்வமாக பாரம்பரிய கலாசார மரபு முறைப்படி நடப்படும்.
 
அதன்படி, நாளை முதல் 45 நாட்களுக்குப் பின்னர் அதாவது 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த அசல பெரஹெரா ஆடிவேல்  திருவிழா ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகி, ஜூலை 21ஆம் திகதி பேரூர் வலம்  மஹா பெரஹெரா இடம்பெற்று, ஜூலை 22ஆம் திகதி காலை மாணிக்க கங்கையில்  நீர் வெட்டும் சடங்குடன் அதாவது தீர்த்தத்துடன் நிறைவடையும்.
 
இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் ஆலய தலைமையகத்தினால் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 

Related posts