நாவிதன்வெளியில் அன்றாட வாழ்கையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தொழில்லதிபர் சித்தீக் நதீரினால் நிவாரணம் வழங்கி வைப்பு

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டத்தினால்  நாவிதன்வெளி பிரதேசத்தில் அன்றாட வாழ்கையில் பாதிக்கப்பட்ட சுமார் 75 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள், மற்றும் நிதியுதவிகள் நேற்று வழங்கப்பட்டது.
 
பிரபல தொழில்லதிபரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளரும், மாவட்ட செயற்குழு பிரதித் தலைவருமான சித்தீக் நதீரின் சொந்த நிதியிலிருந்து மிகவும் பின்தங்கிய வறுமைக்குட்பட்ட குடும்பங்கள் வாழும் நாவிதன்வெளி பிரதேசத்தில் இவ்வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துவருகின்றார்.
 
பிரதேச முக்கியஸ்தர்களின்  ஊடாக உதவிகளை பெறுவதற்கு தகுதியான முஸ்லிம் மற்றும் தமிழ் குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு தெரிவுசெய்யப்பட்ட  குடும்பங்களுக்கு வீடு வீடாக சென்று நிதி உதவிகள், உலர் உணவு பொருட்கள் கையளிக்கப்பட்டுவருகின்றது.

Related posts