நாவிதன்வெளியில் கொடியவரட்சி 08ஆயிரம் பேர் பாதிப்புதினமும் 44ஆயிரம்லீற்றர் குடிநீர் சுழற்சிமுறையில் விநியோகம்!

அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய நாவிதன்வெளிப்பிரதேசத்தில் நிலவும் கடும்வரட்சி காரணமாக 2639 குடும்பங்களைச்சேர்ந்த  8 ஆயிரத்து 279 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளிப்பிரதேசசெயலகப்பிரிவிலுள்ள 20 கிராமசேவை உத்தியோகத்தர்பிரிவுகளில்  13 பிரிவுகள் சமகால வரட்சியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.
குறிப்பாக மத்தியமுகாம் அன்னமலை வீரச்சோலை நாவிதன்வெளி  சொறிக்கல்முனை போன்ற பிரதேசங்கள் மிகமோசமாகப்பாதிக்கப்பட்டுள்ளன.
பிரதானமாக இவர்கள் குடிநீர்ப்பிரச்சினையை எதிர்நோக்கிவருகிறார்கள். அதனால் இவர்களுக்கு தினமும் 44ஆயிரம் லீற்றர் குடிநீர் மூன்று வவுசர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டுவருவதாக நாவிதன்வெளிப்பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் மேலும் தெரிவித்தார்.
பிரதேசசெயலக அனர்த்தமுகாமைத்துவப்பிரிவின் இரண்டு பவுசர்கள் மூலமும் பிரதேசசபையின் ஒரு வவுசர் மூலமும் தினமும் சுழற்சிமுறையில் குடிநீர் வழங்கப்பட்டுவருகின்றன.
கடந்த யூலை மாதம் தொடக்கம் இக்குடிநீர்விநியோகம் இடம்பெற்றுவருகிறது.
 
இங்கு நேரடிவிஜயம்செய்தபோது  குடிதண்ணீர்தட்டுப்பாட்டிற்கான காரணத்தை அறியமுடிந்தது.
பின்தங்கிய இப்பிரதேசத்தில் பெரும்பாலான பிரிவுகளில் குழாய்நீர்விநியோகத்திற்கான பிரதான இணைப்பு இல்லாமையே இதற்கு அடிப்படைக்காரணமாக அமைந்தது. பிரதான இணைப்பு இருக்கும்பட்சத்தில் மக்கள் தாமாக முன்வந்து உப இணைப்புகளைப்பெறுவார்கள்.
இப்பகுதிகளில் பிரதான நீரிணைப்புக்குழாய்களைப் பொருத்துவதன்மூலம் எதிர்காலத்தில் இப்பிராந்திய வரட்சிகாலகுடிநீர்ப்பிரச்சினையை தீர்க்கமுடியுமென எதிர்பார்க்கலாம்.
 
இதேவேளை இதுதொடர்பாக பிரதேசசெயலகத்தில் பெற்ற தகவலின்படி இப்பிரதான இணைப்பிற்காக இதுவரை 4மில்லியன்ருபா ஒன்னூர் திட்டத்தின்கீழ் வீடமைப்புத்திட்டமக்களின் குடிநீர்த்தேவைக்காகவும்  20மில்லியன்ருபா வேறொருதிட்டத்தின்கீழும் செலுத்தப்பட்டுள்ளது. இதனைவிட சப்பிரிகம திட்டத்தின்கீழும் 6மில்லியன்ருபா  செலுத்தப்பட்டுள்ளது.
 
எனினும் செலுத்திய பணத்திற்கு இன்னும் பிரதான நீரிணைப்பு மேற்கொள்ளப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தேசியநீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபையினர் இப்பிரதேச மக்களின் குடிநீர்ப்பிரச்சினையைத் தீர்க்க பிரதானஇணைப்பை வழங்க விரைவாக முன்வரவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

Related posts