நாவிதன்வெளி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண விலை அடிப்படையில் அத்தியவசிய பொருட்கள் அடங்கி பொதி நாளாந்தம் வீடு வீடாக கொண்டு வழங்கும் திட்டம் 15ஆம் கொளனி கிராமிய வங்கிக்கு முன்பாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நாவிதன்வெளி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஏ.விநாயக பிள்ளை தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபையின் பதில் தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட் இத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தார். இதில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.பவப்பிரகாசம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டார்.